Happy National CA Day 2022 Wishes in Tamil for CAs on 1st July

Please follow and like us:

CA Day Wishes in Tamil – The Institute of Chartered Accountants of India was established on July 1, 1949. The ICAI is one of the nation’s oldest professional organizations. It is the largest professional accounting body in India and 2nd globally. The body has more than 3.5 lakh members. In India, the accounting profession and financial auditing are governed and licensed by the ICAI.CA Day Wishes in Tamil

Hence, to celebrate the ICAI foundation day and Chartered Accountants in India, 1st July is celebrated as National CA Day. Since CAs play a vital role in our country’s finance and economy, they are honored on this day. CA Gopaldas Padamsey Kapadia was the first CA to be accredited by the ICAI and hence, became the first President of the ICAI.

CA Day Wishes in Tamil

CA – Chartered Accountant எனப்படும் கணக்கறிஞர்கள் ஒவ்வொரு நிறுவனத்தின் முக்கிய அங்கமாகும். கணக்கு என்பது எந்தவொரு துறையை எடுத்தாலும் அதில் அவசியமானதாக இருக்கக்கூடும். அவ்வகையில் கணக்கறிஞர்கள் மிகவும் முக்கியமானவர்கள்.
ஒரு நிறுவனத்தின் வரவு, செலவு, இலாபம், நஷ்டம் என அனைத்து விதமான விடயங்களிலும் இவர்களின் பங்கு இருக்கும். பணத்தின் மதிப்பை இவர்களவிற்கு உணர்ந்தவர் எவரும் இலர். அதேப்போல், எங்கு பணத்தை சேமிக்க வேண்டும், சேமிக்க கூடாது என்பது இவர்களின் விரல் நுனியில் இருக்கும்.
மேற்சொன்னவைகள் இவர்களின் விரல் நுனியில் இருப்பதற்கு காரணம், இவர்களின் படிப்பே ஆகும். கணக்கறிஞர்களுக்கான படிப்பு என்பது இப்போது இந்தியாவிற்கு வந்ததில்லை. 1913 ஆம் ஆண்டு சமயத்தில் பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவை ஆட்சி செய்துக்கொண்டிருக்கும்போது, இந்தியாவில் செயல்பட்டுவந்த அனைத்து நிறுவனங்களுக்கும் கணக்கறிஞர்கள் அத்தியாவசியம் என்றது பிரிட்டிஷ் அரசு.

CA Day Wishes in Tamil

அதன்படி, 1918 ஆம் ஆண்டு டிப்ளோமா இன் அக்கவுண்டன்சி (Diploma in Accountancy) என்ற பாடத்திட்டமானது மும்பையில் முதன்முதலாக அமல்படுத்தப்படுகிறது. இதன்பிறகு இந்தியர்கள் அக்கவுண்டன்சி எனும் பாடத்திட்டத்தைப் பற்றி புரிந்து அதிக அளவில் படிக்கத் தொடங்கினர்.
இதன்பிறகு 1930 ஆம் ஆண்டு இந்தியாவில் ஒரு சட்டம் இயற்றப்படுகிறது. அச்சட்டத்தின்படி, கணக்கறிஞர்கள் அனைவரும் தங்களின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே நிறுவனங்களில் வேலை என்றும் கூறப்பட்டது.
இதன்பின்னும், கணக்கியல் துறையை ஒழுங்குப்படுத்த வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் எழுந்தது. கோரிக்கைகள் வலுப்பெறவே இந்தியா சுதந்திரம் அடைந்த அடுத்த வருடம், அதாவது 1948 ஆம் ஆண்டு இது தொடர்பாக ஆலோசனை நடத்த குழு ஒன்றை முன்மொழிந்தது. அதன்படி, 1949 ஆம் ஆண்டு The Institute of Chartered Accountants of India எனப்படும் இந்திய பட்டயக் கணக்கறிஞர்களுக்கான கழகம் உருவாக்கப்பட்டது.

CA Day Wishes in Tamil

அடுத்தடுத்த வருடங்களில் ரிஜிஸ்டர்ட் அக்கவுண்டன்ட் என்ற சொல்லாடல் மறைந்து சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் என்ற சொல்லாடல் நடைமுறை புழக்கத்திற்கு வந்தது. இப்படியாகத்தான் இந்தியாவில் Chartered Accountant நுழைந்தது. மேலும், ஜுலை மாதம் ஒன்றாம் தேதி வருடாவருடம் கணக்கறிஞர்களுக்கான தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்வகையில் இவ்வருடமும் கணக்கறிஞர்களுக்கான தினம்  கொண்டாடப்பட உள்ளது.

Happy National CA Day wishes in Tamil

பல்வேறு வகையில் இந்தியாவின் வர்த்தகத்திற்கு உதவும் கணக்கறிஞர்களை வாழ்த்த கீழே சில வாழ்த்து குறிப்புகளை தந்துள்ளோம்!
அவையாவன:

பணத்தை நாங்கள் பெற
உழைப்பே மூலதனம்
மூலதனத்தின் முடிவில் பெற்றதை
உங்களின் ஆலோசனைகளின் படியே
செயல்படுத்துவோம்!
இனிய கணக்கறிஞர் தின நல்வாழ்த்துகள்!

எண்ணற்ற படிப்புகள்
எண்ணற்ற வாய்ப்புகள்
எண்ணற்ற எண்ணற்றவைகள்
இருப்பினும்
நீங்கள் கணக்கறிஞராக
உங்கள் இலக்கை நிர்ணயித்தமைக்கே
உங்களுக்கு வாழ்த்துகள் தோழமையே!
இனிய கணக்கறிஞர் தின நல்வாழ்த்துகள்!

அனைவராலும் அறிஞர்களாக ஆக முடியாது – அறிஞர்கள்
அனைவராலும் கணக்கறிஞர்கள் ஆக முடியாது
கணக்கறிஞர்கள் பட்டயத்திற்குள் சென்றவர்களெல்லாம்
கணக்கறிஞர் பட்டத்துடன் வெளிவர முடியாது
அத்தனையையும் தாண்டி கணக்கறிஞராய்
உருவெடுத்திருப்போரே வாழ்த்துகள்!
இனிய கணக்கறிஞர் தின நல்வாழ்த்துகள்!

CA Day Wishes in Tamil

அவ்வளவு எளிதும் அல்ல
அவ்வளவு மேம்போக்கு அல்ல
நீங்கள் அடைந்திருக்கும் இந்நிலைமை!
கணக்கறிஞரே வாழ்த்துகள்!
இனிய கணக்கறிஞர் தின நல்வாழ்த்துகள்!

பட்டயங்கள் பற்பல
சிஏ என்பதற்கான
கெத்தும் பற்பல!
இனிய கணக்கறிஞர் தின நல்வாழ்த்துகள்!

வரவு செலவு இலாபம் நட்டம்
ஆகியவற்றின் மூலம்
கணக்குகளை மட்டும்
நீங்கள் பார்க்கவில்லை
எங்களின் வாழ்வாதரத்தையும்தான்!
இனிய கணக்கறிஞர் தின நல்வாழ்த்துகள்!

தனிநபர் வளர்ச்சிக்கு மட்டுமல்ல
இந்தியாவின் வளர்ச்சிக்கே
நீங்கள் அவசியம்தான்!
இனிய கணக்கறிஞர் தின நல்வாழ்த்துகள்!

அனைத்து நாட்களிலும்
கணக்குகளால் நிரம்பும்
உங்களின் மூளைகள்
இன்று வாழ்த்துகளால்
நிரம்பட்டும்!
இனிய கணக்கறிஞர் தின நல்வாழ்த்துகள்!

CA Day Wishes in Tamil

கணக்கவியலாளர்கள்
கணக்கறிஞர்கள்
சிஏ என்ற பெயர்களை
நாங்கள் உச்சரிக்கும்போது
வியப்பாகவே இருக்கிறது தோழர்களே!
இனிய கணக்கறிஞர் தின நல்வாழ்த்துகள்!

பொருளாதரத்தால்
இந்தியா செழிக்க
உறுதுணையாக
இருப்பவர்களே
இனிய கணக்கறிஞர் தின நல்வாழ்த்துகள்!

CA Day Wishes in Tamil

CA Day Wishes – CA Day Quotes

CA Day images1

CA Day Messages – CA Day shayari in english

CA Day images2

CA Day images poster

CA Day images3

CA Day slogans – CA Day sms

CA Day images4

CA Day banner – CA Day photos

CA Day images5

Must Read:Happy National CA Day 2022 Wishes in Telugu
Must Read:Happy Chartered Accountant Day Wishes Quotes Messages
Must Read:Download CA Day status quotes, funny quotes, CA jokes
Must Read:Happy National Doctors Day Wishes in Hindi

Must Read:Happy National Doctors Day 2022 Wishes

tentaran google news

For more articles like, “CA Day Wishes in Tamil”, do follow us on FacebookTwitter, and Instagram. For watching our collection of videos, follow us on YouTube.

Leave a Reply

Your email address will not be published.

The content and images used on this site are copyright protected and copyrights vests with their respective owners. We make every effort to link back to original content whenever possible. If you own rights to any of the images, and do not wish them to appear here, please contact us and they will be promptly removed. Usage of content and images on this website is intended to promote our works and no endorsement of the artist shall be implied. Read more detailed ​​disclaimer
Copyright © 2022 Tentaran.com. All rights reserved.
× How can I help you?