Vinayaka Chaturthi Bhajans in Tamil – Vinayaka Chaturthi Tamil Songs
Vinayaka Chaturthi Bhajans in Tamil – விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வெறுமனே பூஜைகள் எந்த அளவு முக்கியமோ அதே அளவு விநாயகனை மனமுருக நினைத்து துதிப்பதும் அவசியமே. இப்படியிருக்கையில், விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகனை.
Vinayaka Chaturthi Bhajans in Tamil
Vinayagar Agval
“வரணும் வரணும் கணபதியே
வந்தே அருள்வாய் கணபதியே
அன்பே சிவமே கணபதியே
அருளும் தருவாய் கணபதியே
இன்னல் நீக்கும் கணபதியே
இன்பச் சோதியே கணபதியே
கண்ணே மணியே கணபதியே
கவலை நீக்கும் கணபதியே
பொன்னே மணியே கணபதியே
பொருளும் தருவாய் கணபதியே
ஆவணித் திங்கள் கணபதியே
அடியேன் தொழுதேன் கணபதியே
சேவடிப் பணிந்தேன் கணபதியே
செல்வம் தருவாய் கணபதியே”
”குணாநிதியே குருவே சரணம்
குணாநிதியே குருவே சரணம்
குறைகள் களைய இதுவே தருணம்
விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே
விநாயகனே வினை தீர்ப்பவனே
உமாபதியே உலகம் என்றாய்
ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்
கணநாதனே மாங்கனியை உண்டாய்
கதிர்வேலனின் கருத்தில் நின்றாய்
விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே”
Vinayaka Chaturthi Bhajans in Tamil
Avani vanthathu pooniya chathurthi vinayagar
”ஓம் என்னும் ப்ரணவ ரூப நாயகா
உமையவளின் பாலனே விநாயகா
தேவர் மூவர் போற்றும் வேத நாயகா
தேவாதி தேவனே விநாயகா.
வல்வினைகள் தீர்க்கும் சக்தி நாயகா
வேண்டும் வரம் தந்திடும் விநாயகா
மௌனத்தின் முழுப்பொருளே நாயகா
முக்கண்ணன் மைந்தனே விநாயகா
பக்தர்களின் உறைவிடமே நாயகா – சர்வ
சக்திகளின் பிறப்பிடம் விநாயகா
முக்திதனை அளித்திடுவாய் நாயகா – உனை
நித்தம் பணிந்திடுவோம் விநாயகா”
”ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடிபோற்றுகின்றேனே”
”விநாயகனே வல்வினையை
வேர் அறுக்க வல்லான் விநாயகனே
வேட்கை தணிவிப்பான் விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினால் கண்ணில் பணிமின் கணிந்து”
Onbathu Kolum
”முன்னவனே யானை முகத்தவனே!
முத்திநலம் சொன்னவனே!
தூய மெய்ச் சுகத்தவனே!
மன்னவனே! சிற்பரனே!
ஐங்கரனே செஞ்சடையஞ் சேகரனே!
தற்பரனே! நின்தாள் சரண்!”
”மொழியின் மறைமுதலே
முந்நயனத் தேறே கழியவரும் பொருளே
கண்ணே செழிய கலாலயனே
எங்கள் கணபதியே
நின்னை அலாலயனே
சூழாதென் அன்பு”
Vinayaka Chaturthi Bhajans in Tamil
Vinayagane Vinay Theerpavane
”சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்”
”வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்”
”இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து”
Vinayaka Chaturthi Bhajans in Tamil
Onbathu Kolum Vinayagar
”குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்”
”வில்லாண் மையரும் விரிமா தமிழில்
வல்லாண் மையரும் வளமாய்ப் புகழும்
நல்லாண் மையது நனியே மிளிரும்
சொல்லாண் மைகொடு எந்துரியப் பொருளே”
”கம் கணபதையே நமோ நம
கௌரிதனையா நமோ நம
ஏகாதந்தா நமோ நம
விக்னவிநாயக நமோ நம
பார்வதிதனையா நமோ நம
சிவசுதவராதா நமோ நம
புத்தி கணப்பதே நமோ நம
சித்தி கணப்பதே நமோ நம”
Must Read:Ganpati Bappa Songs in Marathi
Must Read:Ganesh Chaturthi Bhajan in Marathi
Must Read:Ganesh Chaturthi Puja Samagri List in Hindi
For more articles like, “Vinayaka Chaturthi Bhajans in Tamil”, do follow us on Facebook, Twitter, and Instagram. For watching our collection of videos, follow us on YouTube.